ரஷ்யாவினால் துவம்சம் செய்யப்பட்ட உக்ரைனிய துறைமுகம்
உக்ரைனிய தானிய ஏற்றுமதி துறைமுகத்திற்கு ரஷ்யா ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகருக்கு அருகிலுள்ள துறைமுகத்தின் மீது ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
குறித்த ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் உக்ரைனின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ரஷ்யா நடத்திய தாக்குதல்
இருந்தபோதும், வீசப்பட்ட 12 'காலிபர்' ரக ஏவுகணைகளில் ஒன்றும், இரண்டு பி-800 ஓனிக்ஸ் ரக ஏவுகணைகளும் வான்பாதுகாப்பு ஏவுகணைகளிடம் சிக்காமல் இலக்குகளைத் தாக்கியுள்ளன.
இதனால், துறைமுகத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்ததுடன் ஒரு தானியக் கிடங்கும் நாசமானது, மேலும், கைவிடப்பட்ட ஹோட்டல் கட்டடம் ஒன்றும் சேதமடைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவந்துள்ளது.