புலம்பெயர்ந்தோரை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பும் ரஷ்யா..!
ரஷ்யா, புலம்பெயர்ந்தோரை கட்டாயப்படுத்தி உக்ரைன் போருக்கு அனுப்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் அமைப்பு Wagner group என்னும் அமைப்பு. இந்த அமைப்பில் ஏராளம் தன்னார்வலர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவந்தனர்.
தற்போது போரிட தன்னார்வலர்கள் கிடைக்காததால், புலம்பெயர்ந்தோரை, அதாவது, மத்திய ஆசியாவைச் சேர்ந்த சிறைக்கைதிகளை Wagner குழுவினர் கட்டாயப்படுத்தி உக்ரைன் போருக்கு அனுப்புவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கட்டாய ஒப்பந்தம்
சமூக ஆர்வலரான Olga Romanova இது குறித்துக் கூறும்போது, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டு போர் முனைக்கு அனுப்பிவைக்கப்படுவதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையிலான போர் பதற்றம் ஆரம்பமாகி தற்போது ஒரு வருட காலம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.