ரஷ்ய ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் 16 பேர் பலி
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலில் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சந்தைப்பகுதி மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Зеленський опублікував відео удару росіян по Констянтинівці pic.twitter.com/POq4IgupJn
— Українська правда ✌️ (@ukrpravda_news) September 6, 2023
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன் உக்ரைன் வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.