ஆனந்த பாலித கைது:அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்:சஜித்
நமது நாட்டின் தொழிலாளர் மக்களுக்காகக் குரல் கொடுத்த தொழிற்சங்கத் தலைவரான ஆனந்த பாலித கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது அரசியலமைப்பின் மூலம் நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறும் செயலாகும் என்று இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனந்த பாலித அவர்கள் தொழிலாளரின் உரிமைகளுக்காக எப்போதுமே முன்னின்று செயல்பட்ட ஒருவராவார்.
நேரக் கொடுப்பனவு மோசடி
அவரது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமையவே ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |