விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர

Jaffna Sarath Weerasekara Sri Lanka Final War
By Rakesh Sep 20, 2026 12:50 AM GMT
Report

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசு அனுமதியளிக்குமா என  சீற்றத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...

மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...

விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை

அவர் மேலும் கூறுகையில், "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், பௌத்த சின்னங்களும் மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர | Sarathweerasekera Furiously Thileepan Memorial

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசு அனுமதியளிக்குமா என்று நாம் கேட்கின்றோம்.

திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டுள்ளனர். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக்கொள்வாரா?

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதம் விதைக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அரசு பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகின்றது. கடந்த நல்லாட்சி அரசும் இதேபோன்று செயற்பட்டதன் இறுதிக் கட்டமாகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

மேலும் அரசியல் வெற்றிகளுக்காகப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை எந்தக் காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

you may like this 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025