செளமியமூர்த்தி தொண்டமானின் சாதனைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க பிரதமர் பரிந்துரை
sri lanka
people
sawmiyamoorthi thondamaan
By Shalini
மறைந்த செளமியமூர்த்தி தொண்டமானின் சாதனைகளை கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க பிரதமரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த இ.தொ.கா தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானின்108 வது பிறந்தநாளை கெளரவிக்கும் முகமாக,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மறைந்த தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானின் சாதனைகளை கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளார்.
இப்பரிந்துரை கடிதத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் கையளித்துள்ளார்.