துயர சம்பவம்: பேருந்தில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு
நோட்டன் பிரிட்ஜ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் விபத்தொன்றில் சிக்கிய 12 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் புதன்கிழமை (07) காலை 7:15 மணியளவில் நோட்டன் பிரிட்ஜ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிட்போட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும், பம்பரகல பகுதியைச் சேர்ந்த ராஜி போல்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதியை கைது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஹங்கராம்பிட்டிய பகுதியிலிருந்து நோட்டன் ஊடாக ஹட்டன் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் சைக்கிள் மோதியதில், முன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த மாணவன், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, நோட்டனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த அரச பேருந்தில் நிலை தடுமாறி மோதியுள்ளான்.
படுகாயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதே அவன் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும், பம்பரகல பகுதியைச் சேர்ந்த ராஜி போல்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோட்டன் பிரிட்ஜ் காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் பேருந்தின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |