ஆற்றுக்குள் குதித்த பாடசாலை மாணவன் - மூன்று நாட்களின் பின் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
தோப்புவ பாலத்தில் இருந்து மஹாஓயாவிற்கு குதித்த 17 வயதுடைய மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு கொச்சிக்கடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்கள் குழு ஆற்றில் குதித்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் சடலத்தைக் கண்டெடுத்தது.
இந்த மாணவன் மாதம்பெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

கையடக்கத் தொலைபேசிக்காக மாதாந்தம் செலுத்த வேண்டிய 10,000 ரூபா பணத்துடன் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவனின் தாய் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய அவர் தோப்புவ பாலத்தில் இருந்து மஹாஓயா ஆற்றுக்குள் குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி