சீரற்ற வானிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு பூட்டு
Puttalam
Weather
Floods In Sri Lanka
Sri Lankan Schools
By Thulsi
சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் (puttalam) மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வடமேல் மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
பாடசாலை விடுமுறை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானம்
கடந்த 18 ஆம் திகதி இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
பல கிராமங்களில் உள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 17 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்