சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க ஊடகங்களின் மீது பழிபோடும் அரசியல் தலைமைகள்!
கருடா சௌக்கியமா என்பது போல சிறிலங்கா நாடாளுமன்ற அரங்கில் அதன் சிறப்புரிமை மீது நின்று ஐபிசி தமிழ் மீது ஒரு அவதூறு தாக்குதலையும் மற்றும் வலிந்த குற்றச்சாட்டையும் தொடுத்து அதன் ஊடகபணி அங்கீகாரம் பெறாத பணி என கோள்மூட்டியும் கொடுக்கும் மனோநிலைகள் வந்துவிட்டன.
தத்தமது சொந்த பலவீன நிலைகளுக்காக ஊடகங்களையும் மற்றும் ஊடகர்களையும் வசைபாடும் அரசியல் முகங்கள் கடந்த சில நாட்களாக உலகில் என்ன நடக்கின்றது என்பதையும் சற்று அவதானிக்கவேண்டும்.
பிரான்சில் ஒரு குட்டி இணைய ஊடகமாக மீடியாபார்ட் வெளியிட்ட ஒரு செய்தியால் அதன் முன்னாள் அரசதலைர் நிக்கோலா சார்க்கோசி சிறைசென்றார்.
பிரித்தானிய அரண்மணையில் இளவரசராக இருந்த அனட்ருவும் ஊடகங்களில் வெளியான ஒரு புயலால் இறுதியில் தனது இளவரசர் பொறுப்பு உட்பட்ட அரண்மனை கவச குண்டலங்களை இழந்தார்.
பழைய கதை எனப்பார்த்தால் அமெரிக்காவில் அரச தலைவராக இருந்த நிக்ஸனை வீட்டுக்கு அனுப்பிய வோட்டர் கேட் ஊழலை அம்பலப்படுத்திய இரண்டு ஊடகர்களின் கதை உலகப்பிரபலமானது.
இதே போலவே அமெரிக்காவின் பிரபல பாலியல் குற்றவாளியாக சிறையில் மரணித்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அமெரிக்க அரச தலைவரான ட்ரம்ப் கொண்டிருந்த உறவு குறித்த புதிய மின்னஞ்சல் ஆதாரங்கள் கடந்த 12 ஆம் திகதி ஊடகங்களுக்கு கிட்டின.
அமெரிக்க அரசாங்க முடக்கத்தை ட்ரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தாலும் அவரது எப்ஸ்டீன் பிரச்சனை நீங்கவில்லை.
இதற்கும் அப்பால் ஊடகங்களின் பணிக்குரிய புதிய சுடச்சுட ஆதாரம் வேண்டுமானால் உக்ரைன் அரசதலைவர் வொலடிமீர் ஜெலஸ்கியின் நண்பரான திமூர் மிண்டிஷ் மற்றும் இரண்டு உக்ரைனிய அமைச்சர்களை மையப்படுத்திய நூறு மில்லியன் டொலர் மோசடி குறித்த பிரபல செய்தியை பார்க்கலாம்.
கடந்த 11 திகதி இந்த மோசடி குறித்து உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் வெளியிட்ட செய்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்து நேற்று முன்தினம் உக்ரைனிய நீதி அமைச்சரும் மற்றும் எரிசக்தி அமைச்சரும் தங்கள் பதவிகளை துறந்தனர்.
இருப்பினும், சில சர்ச்சைகளுக்கு உள்ளாகும் தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறான விடயங்களில் வெளிப்படைத்தன்மையாக இருக்காமல் ஊடகங்கள் மீது அவதூற்று பழிபோட்டு தப்பிக்க நினைக்கின்றார்கள்.
ஊடகங்களை வசைபாடுவது கலங்கரை விளக்க வெளிச்சத்தில் மறைவுதேடுவதற்கு ஒப்பானது என்ற வகையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |