தமிழக அரசியலில் பரபரப்பு : விஜயுடன் இணையும் முக்கிய புள்ளி
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை விஜயை அவரது வீட்டில் செங்கோட்டையன் சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.க்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
எம்எல்ஏ பதவியிலிருந்து விலகல்
இந்நிலையில், செங்கோட்டையன் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார். இதுவரை வெளிப்படையாக அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இன்று தனது எம்எல்ஏ பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

ஒரு நாள் பொறுத்திருங்கள்
சட்டசபை வளாகத்துக்கு வந்த அவர், தனது பதவி விலகல் கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு இடம் இன்று வழங்கினார். அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயை, செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 4 மணி நேரம் முன்