முல்லைத்தீவில் காயமடைந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்: ஆளுநருக்கு அவசரக் கடிதம்
முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றம் சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சகோதரருக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது நேரடியாக எதிர்கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று(09.10.2026) அவர் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
வைத்தியசாலையின் நிர்வாகச் சீரின்மையால் அசமந்தப்போக்கான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா அல்லது தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், மக்களிடையே எழுந்துள்ள இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |