ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
ஆட்பதிவுத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துப் பொதுச் சேவைகளும் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று சேவைகள்
அதன்படி, நாளை (20) முதல் மீண்டும் மேற்படி ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி முதல் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை சரிசெய்யப்பட்டு நாளை முதல் வழமை போன்று சேவைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு 6 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி