இலங்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு UNICEF விடுத்துள்ள 7 கட்டளைகள்
corona
sri lanka
people
schools
By Shalini
இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, COVID-19 இன் அபாயத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஏழு அத்தியாவசிய 7 திட்டங்களை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலைக்கு செல்லும் முன்பும், பாடசாலை விட்டு வந்த பின்னரும், செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டியுள்ளன.
COVID-19 தொற்றுநோய் காரணமாக இலங்கையில் பல மாதங்கள் பாடசாலைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி முதல் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுகின்றன.
மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதும், பாடசாலைகளில் பாதுகாப்பாக இருப்பதும் மிக முக்கியமான ஒன்று என UNICEF தெரிவித்துள்ளது.
அந்த வகையில், UNICEF நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு அத்தியாவசிய செயற்றிட்டங்கள் பின்வருமாறு,
- எப்போதும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை வைத்திருங்கள்.
- எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னும் குறைந்தது 20 வினாடிகளுக்கு உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.
- பொதுவில் இருக்கும்போது உங்கள் மூக்கு மற்றும் வாயை முகமூடியால் மூடவும்.
- தும்மல் அல்லது இருமல் வரும் போது, உங்கள் வளைந்த முழங்கையை அல்லது துணியை பயன்படுத்துங்கள். மற்றும் பயன்படுத்திய திசுக்களை உடனடியாக ஒரு மூடியுடன் கூடிய தொட்டியில் அப்புறப்படுத்தி, சோப்புடன் கைகளை கழுவவும்.
- அனைத்து மேற்பரப்புகளையும் தொடர்ந்து சுத்தமாக சுத்தப்படுத்தவும்.
- உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ காய்ச்சல், தொண்டை வலி, இருமல் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், வீட்டிலேயே இருந்து மருத்துவரை அணுகவும்.
- கொரோனா வைரஸ் காரணமாக யாரிடமும் பாகுபாடு காட்டாதீர்கள்.
அன்பாக இருப்போம், பாதுகாப்பாக இருக்க ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி