ஊழல் சரித்திரப் பக்கங்களை மாற்றிய ஷிராந்தியின் கைது... ராஜபக்ச குடும்பத்தில் ஒரு புதிய பதிவு...

Sonnalum Kuttram
By Dharu Oct 07, 2026 05:38 AM GMT
Report

இலங்கை அரசியல் வரலாற்றில் எத்தனையோ ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அமைச்சர்களும் நீதிமன்றப் படிகளையேறி, சிறைக் கதவுகளையும் தட்டியிருக்கிறார்கள். 

ஆனால், நாட்டின் முதற்பெண்மணி (First Lady) ஒருவரின் கைகளைச் சட்டத்தின் கைவிலங்கு பற்றியிருப்பது இதுவே முதன்முறை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச (Shiranthi Rajapaksa), இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஊழல் சரித்திரப் பக்கங்களை மாற்றியமைத்து, ராஜபக்ச குடும்பத்தின் நீண்ட சாதனைப் பட்டியலில் ஒரு புதிய பதிவை அவர் எழுதியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) இவருக்கு அழைப்பானை அனுப்பியபோது, திடீர் உடல்நலக் குறைவு என்று கூறி, அவசர அவசரமாகச் சிங்கப்பூருக்குப் பறந்தார் ஷிராந்தி.

சிகிச்சை முடிந்து கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு அவர் நாடு திரும்பியபோதே, விமான நிலையத்தில் ‘ஏதோ’ காத்திருக்கிறது என்பதை அவரது சட்டத்தரணிகள் கணித்திருந்தனர்.

கைதிலிருந்து தப்பிக்க மாலிகாகந்த நீதிமன்றத்தில் முன்பிணை (Anticipatory Bail) கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் அதுகுறித்து பரிசீலிக்கும் முன்பே, இன்று அதிகாலை கொழும்பு கிருலப்பனையில் உள்ள அவரது சொகுசு இல்லத்திற்குள் நுழைந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள், அவருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அரசுக்குச் சொந்தமான வங்கி ஒன்றின் சுதுவெல்ல கிளையிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பொதுப் பணத்தைப் பெற்று, அதைப் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு விதிகளுக்கு முரணாகத் தவறாகப் பயன்படுத்தியதே இவர் மீதான முதன்மைக் குற்றச்சாட்டு.

அவர் தலைவராக இருந்த 'சிறிலிய சவிய' (Siriliya Saviya) என்ற தொண்டு நிறுவனத்தின் பெயரில்தான் இந்த வங்கி கணக்கு இயங்கியுள்ளது.

விசாரணையில் கிடைத்த ஆகச்சிறந்த கிண்டலான தகவல் என்னவென்றால், நாட்டின் முதற்பெண்மணியாக இருந்தவர் இந்தக் கணக்கைத் தொடங்குவதற்குக் கொடுத்த தேசிய அடையாள அட்டை எண் "222 222 222V" என்ற ஒரு போலி எண்ணாகும் என்பது

நாட்டின் சட்டத்தை எவ்வளவு அழகாக மதித்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாச மீது எதிர்க்கட்சிகளாலும் அரசியல் விமர்சகர்களாலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும், ஒருபோதும் வழக்குதாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இலங்கை வரலாற்றில் ஷிரந்தியின் கைதானது இதுவரை இடம்பெறாத ஒரு வரலாற்று நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஷிரந்தி திட்டமிட்டே விசாரணையைத் தவிர்த்துவிட்டுச் சென்றார் என்ற குற்றச்சாட்டுகளை ராஜபக்ச தரப்பு மறுத்துள்ளது.

தான் இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே கணித்த ஷிராந்தி ராஜபக்ஷ, நாடு திரும்பிய அக்டோபர் 5ஆம் திகதியன்றே மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை (Anticipatory Bail) கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பாகப் பதிலளிக்குமாறு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அக்டோபர் 13 அன்று அவரை FCID பிரிவில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையிலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று இந்த அதிரடி கைது செய்துள்ளது. 

இதன்படி உலக வரலாற்றை பொருத்தவரை  பல நாடுகளின் முன்னாள் முதற்பெண்மணிகள் (First Ladies) ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

உலக வரலாறு

1. குறிப்பாக தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவியான கிம் கியான் ஹீ, பங்குச் சந்தை முறைகேடு, சொகுசுப் பொருட்கள் மற்றும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நாட்டின் வரலாற்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மற்றும் முதற்பெண்மணி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

2. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன்சூர், சூரியசக்தி திட்ட ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுத் தருவதற்காகப் பெருந்தொகை லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டார். இவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையும், கைப்பற்றப்பட்ட விலைமதிப்பற்ற சொகுசுப் பொருட்களும் உலகளவில் பேசப்பட்டன.

3.பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸின் மனைவியான இமெல்டா மார்க்கோஸ், சுவிஸ் வங்கிகள் மூலமாகப் பல மில்லியன் டொலர் அரசுப் பணத்தை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவரது பிரம்மாண்டமான காலணி (Shoes) சேகரிப்பு உலகப் புகழ்பெற்ற ஊழல் குறியீடாக மாறியது.

4. சாம்பியாவின் முன்னாள் முதற்பெண்மணியான எஸ்தர் லுங்கு, வருமானத்திற்குப் புறம்பாக ஆடம்பர சொத்துக்களைச் சேர்த்தது மற்றும் பணமோசடி (Money Laundering) செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த வரலாற்றில் இன்று இலங்கையின் முதல் பெண்மனி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக ஆரம்பமாகிறது CID-யின் அடுத்த விசாரணை

ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக ஆரம்பமாகிறது CID-யின் அடுத்த விசாரணை

ஷிரந்திக்கு எதிரான சிரிலிய விசாரணையின் அடுத்த பக்கங்கள்...

ஷிரந்திக்கு எதிரான சிரிலிய விசாரணையின் அடுத்த பக்கங்கள்...



you may like this 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025