ரஜீவன் எம்.பி வந்தபின் தருவோம்! உபகரணங்களை பறித்துச் சென்ற பிரஜா சக்தி தலைவர்
யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலகத்தால் பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகத்தில் வைத்து வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் உபகரணங்களை பிரதேச செயலகத்திலிருந்து பயனாளிகள் எடுத்துச் செல்ல முற்பட்டபோது உரும்பிராய் மேற்கு பிரஜா சக்தி தலைவர் அவற்றைப் பறித்துச் சென்றுள்ளார்.
அதாவது, “உபகரணங்களை பெற முடியாது ரஜீவன் எம்.பி வந்த பின்னரே உங்களுக்கு தர முடியும்“என கூறி குறித்த தலைவர் அனைத்தையும் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறிக்கப்பட்ட உபகரணங்கள்
இதனையடுத்து பறித்துச் செல்லப்பட்ட பொருட்கள் உரும்பிராய் மேற்கு பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்றில் பிரஜாசக்தி தலைவரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாட்டால் பயனாளிகள் விரத்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |