தமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிவாலயம் (படங்கள்)
Tamils
Trincomalee
Sri Lanka
By pavan
தமிழர் தலைநகரான திருகோணமலையில் புதிய சிவாலய இடிபாடுகள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வவுளாமடு என்ற இடத்தில் அடர்ந்த காட்டின் நடுவில் இந்த ஆலய எச்சங்கள் இடிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு சிவலிங்கங்கள், கருங்கற் பொழிவுகள், பாரிய கருங்கற்றூண்கள், கருங்கல் மேடை மற்றும் தூண்தாங்கு கற்கள் என்பனவும் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன.
மக்கள் குடியிருப்பு
மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் இந்த இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து, இக்கோயிலை சுற்றி மக்கள் குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் பெருமளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்