திருகோணமலையில் பேரெழுச்சிகண்ட கையெழுத்துப் போராட்டம்
திருகோணமலையில் (Trincomalee) கையெழுத்துப் மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (05) திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கட்சிகளின் சார்பில் யாழ் செம்மணியிலும் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு நீதி வேண்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
படுகொலை
இந்த போராட்டத்திற்கு பெருமளவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வயதான மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டு கிருஷாந்தி குமாரசாமி போன்ற மாணவிக்காகவும் அவரைப்போல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் நீதிவேண்டி தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று (05) மாலை வெருகல் மற்றும் அன்புவழிபுரத்திலும் இக் கையெழுத்து பெறும் நீதிகோரிய போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
