திருகோணமலையில் பேரெழுச்சிகண்ட கையெழுத்துப் போராட்டம்
திருகோணமலையில் (Trincomalee) மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (05) திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கட்சிகளின் சார்பில் யாழ் செம்மணியிலும் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு நீதி வேண்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
படுகொலை
இந்த போராட்டத்திற்கு பெருமளவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வயதான மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டு கிருஷாந்தி குமாரசாமி போன்ற மாணவிக்காகவும் அவரைப்போல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் நீதிவேண்டி தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை (05) மாலை திருகோணமலை - வெருகல் பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதையும் காண முடிந்தது.
கையெழுத்து இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வருகை தந்தார்.இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் பல்வேறு மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இவற்றுக்கான நீதிகோரி கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





