உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் கால அவகாசம் கேட்ட மைத்திரி
உயிர்த்த ஞாயிறு (Easter Attack) தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த நட்டஈட்டில் எஞ்சிய தொகையை செலுத்த கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கோரியுள்ளார்.
இது தொடர்பில் தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழுவினரால் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, உயர் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தீர்ப்பை அறிவித்திருந்தது.
முன்னாள் அதிபர்
குறித்த தீர்ப்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 100 மில்லியன் ரூபாவினை நட்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்தவகையில், தாம் செலுத்த வேண்டிய நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்த முன்னாள் அதிபர் எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு மேலும் ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |