கைவிடப்பட்ட இராணுவ முகாமின் வழிபாட்டிடத்தில் சிவலிங்கம்

Sri Lanka Army Sri Lankan Tamils Sri Lanka Hinduism Buddhism
By Uky(ஊகி) Sep 25, 2023 05:00 AM GMT
Report

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள விரும்பாது அதனை நீளமாக்கிக் கொண்டு அதன் மீதேறி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் இலங்கை அரசியலாளர்கள்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இப்போது மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்து பிரச்சினையோடு பயணிக்கும் துர்ப்பாக்கியம் நடந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

இதுவரை இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை எட்டிக்கொள்ளவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

300 மில்லியன் ருபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் கென்யா பிரஜை கைது

300 மில்லியன் ருபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் கென்யா பிரஜை கைது


இராணுவ வீரர்களின் வழிபாட்டுக்காக

மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் கரிப்பட்ட முறிப்பு அமைந்துள்ளது. இங்கு பிரதான வீதியையொட்டி இருந்தது சிறிலங்கா இராணுவத்தின் முகாம்.(இது இப்போது கைவிடப்பட்டுள்ளது.) இந்த முகாமினுள் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. 

கைவிடப்பட்ட இராணுவ முகாமின் வழிபாட்டிடத்தில் சிவலிங்கம் | Sivalingam At Shrine Of An Abandoned Military Camp

அங்குள்ள இராணுவ வீரர்களின் மத வழிபாட்டுக்காக வீதியை பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டிருந்தது இரு வழிபாட்டுத்தலங்கள். ஒன்று புத்த பெருமானை வழிபடுவதற்கானது.மற்றையது இந்துக் கடவுள்களை வழிபடுவதற்கானது.

பௌத்த சிங்கள மக்களிடையே புத்தருடன் பஞ்சமூர்த்திகள் மற்றும் சரஸ்வதி, சக்தி, இலக்குமி, பிள்ளையாரை வணங்கும் பழக்கம் உடையவர்கள் என்பது இங்கே நினைவு கூறவேண்டும்.

மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ள 16 எம்பிகள்

மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ள 16 எம்பிகள்


இடம் மாற்றப்பட்ட  சிவலிங்கம்

இப்போது இந்த இராணுவ முகாம் கைவிடப்பட்டுள்ளது. முகாம் அகற்றப்பட்ட போது புத்தரின் சிலையும் அகற்றப்பட்டு அது வைக்கப்பட்ட தளம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட இராணுவ முகாமின் வழிபாட்டிடத்தில் சிவலிங்கம் | Sivalingam At Shrine Of An Abandoned Military Camp

இரு வழிபாட்டிடங்கள் இருந்த போதும் புத்தரின் சிலை இருந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்துள்ளார்கள். ஆயினும் தொடர்ந்து வழிபடும் போக்கு இல்லை. அருகிலுள்ள இந்துக்கடவுளரின் வழிபாட்டிடம் அப்படியே இருப்பதையும் காணமுடிந்தது.

இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் இங்கு எந்த வழிபாடுகளும் இடம்பெறவில்லை. சிவலிங்கத்தைக் கொண்டுவந்து வைத்த பின்னரும் எந்த வழிபாடுகளும் நடைபெறுவதற்கான அடையாளங்களும் அங்கு இல்லை. 

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: சர்வதேச விசாரணை அவசியமில்லை என்கிறார் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: சர்வதேச விசாரணை அவசியமில்லை என்கிறார் மல்கம் ரஞ்சித்


மத முரண்பாடுகளை ஏற்படுத்தும்

இது பற்றி இந்து சமய மத குருவிடம் உரையாடிய போது வழிபாடுகளற்று இருப்பது என்பது மனவருத்தம் தரக்கூடிய ஒரு விடயம் என குறிப்பிட்டிருந்தார். சிவலிங்கம் வைக்கப்பட்ட அந்த பீடத்தை சுத்தம் செய்து நிறப்பூச்சுக்களை மாற்றி சிவலிங்கத்தை வைத்திருக்கலாம்.

கைவிடப்பட்ட இராணுவ முகாமின் வழிபாட்டிடத்தில் சிவலிங்கம் | Sivalingam At Shrine Of An Abandoned Military Camp

அவ்வாறில்லாத இந்த செயற்பாட்டால் ஏற்பட்ட தோற்ற மாற்றம் மத முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதோடு பௌத்த மதத்தை பற்றுறுதியோடு பின்பற்றும் மனிதரிடையே மனக்கசப்பு ஏற்படுத்தும்.

எந்த மதங்களும் மனிதரிடையே மன அமைதியை ஏற்படுத்தி அமைதியான வாழ்வு முறையை வாழவே வழிகாட்டுகின்றன என பொருள்படும் வகையில் மேலும் குறிப்பிட்டார்.  

நிலங்களை அபகரிக்கும் உள் நோக்கம்

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலங்களில் தொல்பொருட்கள் என்று கூறி இப்படி கைவிடப்பட பௌத்த வழிபாட்டிடங்களைக் கொண்டு எதிர்காலத்தில் தமிழரின் நிலங்களை அபகரிக்கும் உள் நோக்கம் இராணுவத்தினருக்கு இருக்கலாம் என வரலாற்று தேடலுள்ள ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

கைவிடப்பட்ட இராணுவ முகாமின் வழிபாட்டிடத்தில் சிவலிங்கம் | Sivalingam At Shrine Of An Abandoned Military Camp

படை முகாம் அகற்றப்படும் போது அந்த இடம் முன்பிருந்தது போல விட்டுச் செல்வதுதான் இராணுவ இயல்பு. புத்தரை வழிபட்ட இடங்களை அப்படியே விட்டுச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மேலும் கூறினார்.

கற்சிலைமடு, கரிவேலன்கண்டல், நெடுங்கேணி பாடசாலைக்கு முன்னிருந்த இராணுவ முகாம்களிலும் அந்த முகாம்கள் அகற்றப்படும் போது முகாம் வழிப்பாட்டுக்காக அமைக்கப்பட்ட புத்த வழிபாட்டிடங்களை அப்படியே விட்டுச் செல்கின்றனர். என்பது இங்கே நினைவில் கொள்ளவேண்டிய விடயமாகும்.

தமிழ் தேசியம் பற்றி பேசுவோர் இந்த விடயங்களில் கவனமெடுக்காது போகும் போது பல ஆண்டுகளின் பின்னர் இந்த இடங்களில் பௌத்த மத வழிபாடு இருந்துள்ளது.என்று உண்மைக்கு மாறான வாதிடல்களை சிங்கள கடும்போக்காளர்கள் முன்வைப்பார்கள் என்பது திண்ணம். 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 25 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்