அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட சரித் அபேசிங்க! சஜித் கட்சி அதிரடி
ஹொரண தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றிய சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியையும், அவர் கட்சியில் வகித்த அனைத்துப் பதவிகளையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு கையூட்டுச் சம்பவம் தொடர்பாக, சரித் அபேசிங்கவை நேற்று (25) விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
இது தொடர்பாக ஒரு சிறப்பு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, கூறப்படும் கையூட்டுச் சம்பவம் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, சரித் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவோ, அமைப்பாளராகவோ அல்லது வேறு எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது எந்த நேரத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கோ கட்சிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
எனவே, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்பதை தங்கள் கட்சி எப்போதும் ஏற்றுக்கொள்வதாக அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 21 மணி நேரம் முன்