விபத்துக்குள்ளான விமானப்படையின் உலங்கு வானூர்தி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை விமான(Sri lanka Air force) படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானமை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
குறித்த உலங்கு வானூர்தி மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பில் முழுமையாக விசாரித்து விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மற்றும் விமானப்படைக்கு தெஹியத்தகண்டிய நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
விபத்து தொடர்பிலான அறிக்கை
உலங்கு வானூர்தி விபத்து தொடர்பிலான அறிக்கைகளை காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியின் சிதைந்த பாகங்கள் மேலதிக ஆய்விற்காக கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
