கரையோர தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
By Sathangani
பாணந்துறை (Panadura) தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (13) காலை தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் கரையோர தொடருந்து சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையில் இருந்து மருதானை (Maradana) நோக்கி பயணித்த 8339 என்ற தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
சமிக்ஞை பாதிப்பு
தொடருந்தின் பெட்டி ஒன்று அருகில் இருந்த சமிக்ஞை பகுதியில் மோதியதால் சமிக்ஞை அமைப்பு முற்றிலும் செயலிழந்ததுள்ளது.

இதனால் கரையோர தொடருந்து சேவை மொரட்டுவை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தண்டவாளத்தை சீரமைக்க கணிசமான காலம் எடுக்கும் என தொடருந்து திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 16 மணி நேரம் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்