மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் கைது : நீதிமன்றின் உத்தரவு

Israel Law and Order Foreign Employment Bureau
By Sathangani Oct 03, 2026 06:53 AM GMT
Report

இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்றும், கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

சந்தேகநபர், பாதிக்கப்பட்ட நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து, தனக்குள்ள செல்வாக்கைக் காட்டி நம்பவைக்கும் வகையில் நடந்து கொண்டு இந்த மோசடியைச் செய்துள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் கைது : நீதிமன்றின் உத்தரவு | Sl Ex President S Coordinating Secretary Arrested

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காகப் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நீண்டகாலமாக இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டுபாய் விமானக் கடத்தல் திட்டமிட்ட தீவிரவாத சதி..! கூட்டு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

டுபாய் விமானக் கடத்தல் திட்டமிட்ட தீவிரவாத சதி..! கூட்டு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த 28 பில்லியன் ரூபாய் இலாபம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த 28 பில்லியன் ரூபாய் இலாபம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016