இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட 7 பில்லியன்

Manusha Nanayakkara Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka Foreign Employment Bureau
By Sathangani Nov 30, 2023 03:53 AM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 04 பில்லியன் ரூபாயிற்கான காசோலை நேற்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பு விடுமுறைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள அரிய வாய்ப்பு!

சிறப்பு விடுமுறைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள அரிய வாய்ப்பு!


“கரு சரு” வேலைத்திட்டம்

மேற்படி 07 பில்லியன் ரூபாயில் 03 பில்லியன் ரூபாய் ஏற்கனவே அதிபரிடம் வழங்கப்பட்டதோடு, அதற்கு இணையாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட 7 பில்லியன் | Sl Foreign Employment Bureau Given 7 Billion

இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3382 மில்லியன்களை வழங்கியிருந்தாலும் ஒரு வருடத்தில் 07 பில்லியன் ரூபாயை வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர். பி. ஏ. விமலவீர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2023ஆம் ஆண்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிபருக்கு விளக்கமளித்தார்.

இந்நாட்டின் முறைசாரா வகையில் தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு கௌரவம் அளித்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக அவர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் “கரு சரு” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் சந்தை தொடர்பான தகவல் கட்டமைப்புடன் அவர்களை இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கேள்வி எழுப்ப முடியுமா!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கேள்வி எழுப்ப முடியுமா!


அந்நியச் செலாவணி பெறுதல் 

இலங்கைக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை அதிகரிப்பதற்காக, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர் சங்கம், ஸ்மார்ட் கிளப் வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தொழில்முறை வழிகாட்டல் நடவடிக்கைகள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுதிப்பத்திர முறைமையை அறிமுகம் செய்தல் தொடர்பான விடயங்களை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட 7 பில்லியன் | Sl Foreign Employment Bureau Given 7 Billion

கடந்த 18 மாதங்களில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற முடிந்ததாகத் தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், தொழிலுக்காக வெளிநாட்டு செல்வோருக்காக விமான நிலையத்தில் தனியான பிரிவை அமைப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிபரிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் பணம் இலங்கைக்கு அந்நிய செலாவணி பெறுவதற்கான முக்கியமான மூலங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையிலான அமைச்சின் வேலைத்திட்டத்தை பாராட்டியதுடன், புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தொழிலாளர் சட்டங்களை திருத்த எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024