இலங்கை - ஆப்கானிஸ்தான் 2ஆவது ரி 20 போட்டி இன்று
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ரி 20 போட்டி இன்றைய தினம்(19) இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியானது, இன்று(19) தம்புள்ளையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
3ஆவது ரி20 போட்டி நாளை மறுதினம்(21) தம்புள்ளையில் நடைபெற உள்ளது.
இரண்டாவது ரி20 போட்டி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளதோடு நேற்று முன்தினம்(17) இடம்பெற்ற ரி20 போட்டியிலும் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் 3ஆவது ரி20 போட்டிகளுக்கான அனைத்து அனுமதிச் சீட்டுக்களும் விற்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதனால், கொழும்பு மற்றும் தம்புள்ளையில் உள்ள அனுமதிச் சீட்டு விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
போட்டிகளுக்கான அனுமதிச் சீட்டுக்களை பெறுவதற்காக அனுமதிச் சீட்டு விற்பனை கூடங்களுக்கு வருகைதர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |