C.M விஜய்யிடம் துப்பாக்கி கோரும் ஈழத்தாய்!
போதைபிடியில் உள்ள இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த ஹோமகம மீகொட சந்திப்பகுதியில் வெசாக் தான சாலையில் நின்ற மக்கள் மீது போதைபிடிசாரதி செலுத்திய ஒரு வாகனம் 6 பேரை பலியெடுத்ததுடன் மேலும் 7 பேரை படுகாயப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு கொழும்பு வெலிக்கடை பகுதியில் போதைபொருளுக்கு அடிமையான மூவர், வாடகை வண்டியொன்றின் சாரதி ஒருவரை வழிமறித்து செய்த சம்பவங்களின் காணொளி ஏற்படுத்திய அதிர்ச்சி மாறுவதற்கு முன்னர் இன்னொரு போதைசாரதி இந்த அவலத்தை ஏற்படுத்தினார்.
இலங்கையில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற பிரான்ஸ் மற்றும் தமிழகத்தில் இலங்கை பூர்வீகத்தை சேர்ந்த இருவரின் அகால மரணங்களும் தொடர்ந்தும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகரபகுதியான பொபினியில் ஈழத்தமிழர் ஒருவர் பிரெஞ்சு காவற்துறையின் துப்பாக்கிசூட்டில் பலியான சம்பவத்துக்கு அப்பால் தமிழக தலைநகரில் இலங்கையை சேர்ந்த ஏதிலி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாகனத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த தனது மகளை கொலை செய்த நபரை முதல்வர் விஜய் தூக்கிலிட வேண்டுமெனவும் இல்லை என்றால் தன்னிடம் ஒரு துப்பாக்கியை கொடுத்தால் கொலையாளியை தானே கொன்றுவிட்டு சிறைக்குச் செல்வேன் என கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் அரற்றிய விடயம் ஊடகங்களில் வந்துள்ளன.
இவ்வாறான சம்பங்களுக்கு நீதி கிட்டியதோ இல்லையோ இற்றைக்கு 45 வருடங்களுக்கு 1981 இல் இதே யூன் மாதம் முதலாம் திகதியன்று 81 இல் எரியூட்டப்பட்ட யாழ் பொது நூலகத்துக்கு இன்றுவரை நீதிகிட்டாத நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |