அனோஜன் விவகாரத்திற்கு கருணை மனுக்கள் மூலமே தீர்வு : உலமா கட்சி பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Saudi Arabia
By Farook Sihan Sep 24, 2026 10:04 AM GMT
Report

சவுதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார்.

இப் பிரச்சினைக்குக் கருணை மனுக்கள் மூலமே தீர்வு காண முடியுமே தவிர, ஆர்ப்பாட்டங்களாலோ கவனயீர்ப்புப் போராட்டங்களாலோ பலனில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி

கலவரம் உண்டாகும் என்ற அச்சம் 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "இவ்விவகாரத்தில் சிறீதரன் எம்பி பேசிய வார்த்தைகள் மிகவும் பாரதூரமானவை. அவர் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் தெரிந்து பேசுகின்றாரா அல்லது மந்த நிலையில் பேசுகின்றாரா என்று தெரியவில்லை.

அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரம் உண்டாகும் என அச்ச நிலையைப் பரப்பி வருகின்றனர். இது மிகவும் மோசமான செயற்பாடாகும்.

அனோஜன் விவகாரத்திற்கு கருணை மனுக்கள் மூலமே தீர்வு : உலமா கட்சி பகிரங்கம் | Sl Youth Anojan Sentenced To Death In Saudi Arabia

கடந்த காலங்களில் இலங்கையிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலையில்கூட மரண தண்டனைக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதுகூட சிங்கள - தமிழ் மக்களிடையே கலவரம் வரவில்லை. அவ்வளவு நல்லதொரு நாடுதான் இலங்கை.

ஆனால், தமிழ் - முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே மோதவிடுவதற்காகத் தனது வக்கிர புத்தியுடன் இவர் இவ்வாறு கலவரம் ஏற்படும் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே, அரசாங்கம் இவரது பேச்சுகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நபிகள் நாயகம் மன்னிக்கும் குணம் கொண்டவர் எனப் பேசுகின்றனர். நிச்சயமாக நபிகள் நாயகம் மன்னிப்பின் சிகரம்தான், அவர் உயிருடன் இருந்திருந்தால் மன்னித்திருப்பார். ஆனால், இன்று நாட்டில் சட்டம் ஒன்று இருக்கின்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி

உதாரணமாக, பௌத்த நாடான இலங்கையில் கௌதம புத்தரை ஒருவர் விமர்சித்தால் அவர் மன்னிக்கப்படுவாரா? நிச்சயமாக இல்லை, அவர் சிறைத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். உணர்ச்சிவசப்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும்.

எனவே, இலங்கைகக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவைக் கெடுக்கும் வகையில் அரசியல்வாதிகள் பேசக் கூடாது. தற்போது சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது.

அனோஜன் விவகாரத்திற்கு கருணை மனுக்கள் மூலமே தீர்வு : உலமா கட்சி பகிரங்கம் | Sl Youth Anojan Sentenced To Death In Saudi Arabia

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி குறித்து சவுதி அரேபியாவிற்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. அதனை எவரும் கெடுத்துவிடக் கூடாது.

பல வருடங்கள் சவுதியில் வாழ்ந்தவன் என்ற ரீதியில் கூறுகின்றேன்; அது சாதாரண நாடல்ல, அங்கு ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியாது. அந்த நாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை அந்நாடு விரும்புமா என்பதை யோசிக்க வேண்டும்.

இப் பிரச்சினைக்குக் கருணை மனுக்கள் மூலமே தீர்வு காண முடியுமே தவிர, ஆர்ப்பாட்டங்களாலோ கவனயீர்ப்புப் போராட்டங்களாலோ பலனில்லை.

அனோஜன் செய்தது சாதாரண குற்றமல்ல, முழு முஸ்லிம்களையும் காயப்படுத்திய குற்றமாகும். இருப்பினும், எமது நாட்டுப் பிரஜையான அனோஜன் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்பி வர வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகின்றோம்" எனத் தெரிவித்தார்.

ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே மோதல் : ஆரம்பமான விசாரணைகள்

ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே மோதல் : ஆரம்பமான விசாரணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017