ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!
கெஹல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருளுக்கான இராசாயனங்களை மறைத்து வைத்திருந்த சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தென்னிலங்கை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
விஜய விக்ரம மனம்பேரி பியல் விராஜ் என்ற சந்தேக நபர், மித்தேனிய - தலாவ தெற்கு பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பியல் மனம்பேரியின் சகோதரர்
கெஹல்பத்தர பத்மேவுடன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் தொடர்புடைய இராசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரி குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
அதன்படி, சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
