மட்டக்களப்பில் பாரிய மண் கடத்தல் முறியடிப்பு
batticaloa
arrest
police
By Vanan
மட்டக்களப்பு கறடியனாறு காவல்நிலைய பிரிவில் பாரிய மண் கடத்தல் முறியக்கப்பட்டதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.
நேற்று(2) கரடியனாறு கொஸ்கொல்ல பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி 3 டிப்பர் மற்றும் 2 உழவு இயந்திரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்ட ஐவரை குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்