யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை...! வெளியான காரணம்
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09.5.2024) காலை யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
வாகனங்களை மறித்து சோதனை
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் (Deshabandu Tennakoon) ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ 9 மற்றும் ஏ 32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |