அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு : நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து பிரதான மற்றும் நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
நேற்றைய (06) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ”சந்தைக்கு அரிசி விநியோகிக்க பிரதான அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படுகிறது.
சந்தைக்கு அரிசியை விநியோகிக்காத அரிசி ஆலை உற்பத்தியாளர்களுக்கு இனி கடன் வழங்கப்படமாட்டாது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) செயற்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது” என தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |