சுற்றுலா பயணிகளுக்கு விசா : நாளை எடுக்கப்படவுள்ள முடிவு
இலங்கைக்கு(sri lanka) வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவது குறித்து நாளை (05) முடிவு எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நம்புவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றம் விதித்த தடை
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இ-விசா சேவையை வழங்க மத்திய அமைச்சர்கள் குழு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்தது.
இதன்படி, ஓகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் நடைமுறைக்கு வரும் ஒன்லைன் முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ON ARRIVAL விசா
குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்திய நபர்களுக்கு அது தொடர்பான பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |