மாமனாரின் தாக்குதலில் மருமகன் பலி
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தனது மருமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.
மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு
புவக்பிட்டிய, அஸ்வத்த வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துஷான் ரங்கன மாயாதுன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தின் போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த, குறித்த நபர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மாமனார், கொஸ்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மனைவியை எலும்பு உடையாதவரை தாக்கினால் குற்றமில்லை : ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கடும் சட்டம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |