மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த முக்கிய அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
பண்டிகை காலங்கிளில் விருந்துகளுக்கு சென்றால் சாரதியொருவரை அழைத்துச் செல்லுமாறு காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் டாக்ஸி வாகனங்களில் செல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் 21312 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன, அந்த விபத்துகளில் 2163 பேர் உயிரிழந்துள்ளதோடு, 5296 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்கள்
டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் விபத்துக்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுதாக காவல்துறை அத்தியட்சகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கடந்த 4 நாட்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 232 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்