சிறிலங்கன் எயார்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்
SriLankan Airlines
Sri Lanka
By Beulah
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21) விமானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விமானம் எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவுக்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை
இந்த விமானத்தின் மூலம் சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் மற்றொரு ஏர்பஸ் ஏ-330 விமானத்தையும், மார்ச் மாதத்தில் மற்றொரு ஏர்பஸ் விமானத்தையும் குத்தகை அடிப்படையில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாவனையற்ற விமானங்கள்
மேலும், தற்போது பாவனையில் இல்லாத 02 விமானங்களுக்கு இரண்டு இயந்திரங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 20 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்