இடர்படும் மாணவர்களுக்காக கிளி. முருகானந்தாவில் விசேட செயற்றிட்டம்
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடர்படும் மாணவர்களுக்காக விசேட காலை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடைவுமட்டம் குறைந்த சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வகுப்பு தினமும் காலை 6.30 முதல் 7.30 மணி வரை இடம்பெறுகின்றது.
தேநீரும் சத்துணவும்
குறித்த வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தேநீரும் சத்துணவும் வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தை லண்டன் அபியகம் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
கல்லூரி அதிபர் சூரியகுமாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலையின் மூத்த ஆசிரியர் சுதனேஸ்வரி ஜோதீஸ்வரன், சி. ஆறுமுகம், யாசினி திவாகரன், திரு பிரகலாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அனுசரனை
இதேவேளை குறித்த நிகழ்வுத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியரும் கவிஞருமான தீபச்செல்வன் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவன் கி. அலெக்ஷன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
கடந்த ஆண்டும் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பு மாணவர்களில் அடைவுமட்டம் குறைந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்த காலைநேர விசேட வகுப்பிற்கு லண்டன் அபியகம் அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.