PTA குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

Sri Lankan Tamils Eastern Province
By Rusath Feb 21, 2026 04:31 PM GMT
Report

தனிப்பட்ட உரிமை, மனித உரிமைகள் செயலிழக்கும் நிலையினை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. கருத்துச் சுதந்திரம் வெளிப்பாட்டுச் சுதந்திரமற்ற நாடு மகிழ்ச்சியான நாடாக இருக்கப் போவதில்லை.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதோடு தற்போது வரைபாக இருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டத்தினை அரும்பிலேயே கைவிடுங்கள் என்று கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு குறித்து நீதி அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இக்கோரிக்கையை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் முன்வைத்துள்ளது.

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர்

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர்

தெளிவான வரைவிலக்கணம்

ஒன்றியம் சனிக்கிழமை (21.02.2026) அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பிட்டுள்ளதாவது,

PTA குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை | Special Request Made To The Government

''ஒரு நாட்டில் ஊடகத்துறையானது சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய, செயற்படக்கூடிய நிலைமை காணப்படுவது அவசியமாகும். ஆனால், பயங்கரவாத்திலிருந்து அரசைப்பாதுகாக்கும் சட்ட வரைபில் காணப்படுகின்ற மிகவும் கடுமையான அடக்குமுறை மற்றும் ஜனநாயக எதிர்ப்பு ஏற்பாடுகள் காரணமாக அதனை உடனடியாக அகற்றிக் கொள்வதே சிறப்பான நடைமுறையாக காணப்படும் என்பது எமது அமைப்பின் வேண்டுகோளாகும்.

இச்சட்டவரைபானது ‘பயங்கரவாதம்’ என்பதற்கான தெளிவான வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தல், அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது ஆட்சியாளர்கள் விரும்பத்தகாத, விருப்பமற்ற கருத்துக்களை தெரிவிப்பதுகூட, ‘அரசுக்கு எதிரான நடவடிக்கை என வியாக்கியானம் செய்வதற்கேதுவானதாக விளக்கமளிக்கப்பட்டிருப்பத் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இரகசியத் தகவல்கள் மற்றும் சிவில் நடவடிக்கைகள் குறித்த சரத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நடைபெறுகின்ற அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வேளைகளில் புகைப்படம் எடுத்தல், பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடு தொடர்பில் அறிக்கையிடுதல் போன்றவைகள்கூட குற்றமாக கணிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

தகவல்களை அறிக்கையிடுதல் தொடர்பான சரத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழிற்றுறையாளர்களினதும் மற்றும் சமயத் தலைவர்களினதும் தொழிற்றுறை இரகசியத் தன்மை மற்றும் ஒழுக்கவியல் விடயத்தில் மிகப் பாரதூரமான மீறல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

அதே போன்று, இணையதள மற்றும் டிஜிட்டல் வெளியில் சட்டத்தினூடாக வழங்கப்படுகின்ற அதிகாரத்தின் மூலம் நபர்களின் தொடர்பாடல் உரிமை மறுக்கப்படுவதற்கான வாய்ப்பு, ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர், கரையோரப் பாதுகாவலர்களுக்கு கைது செய்வதற்கு மற்றும் தேடுகையிடுவதற்காக அதிகாரம் அடக்குமுறை ஆளுகைக்கு வழியேற்படுத்தும்.

“பயங்கரவாதத்திற்கு உடந்தையளிக்கின்றார்” என்ற அடையாளப்படுத்தலில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுதல் நடைபெறலாம்.

மகிந்த கொலைகாரர் அல்ல : பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல்

மகிந்த கொலைகாரர் அல்ல : பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல்

விமர்சன ரீதியான அறிக்கை

எந்தவொரு விமர்சன ரீதியான அறிக்கையிடலையும் சட்டத்தின் வலையில் சிக்க வைக்கும் இயலுமை அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம் செயலிழக்கச் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பெருமளவான உதாரணங்கள் இருந்தாலும், அண்மையில் நகைச்சுவைக் கலைஞரான நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை அண்மைய உதாரணமாக காண்பிக்கமுடியும்.

இவ்வாறு சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக பெறுமதிகள் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய விசேட அடக்குமுறையான சட்டங்களுக்கு பதிலாக, நாட்டில் நடைமுறையிலுள்ள சாதாரண குற்றவியல் சட்டங்களை (அவசியமெனில், சர்வதேச மனித உரிமைச் சட்டகங்களை மீறாத வகையில்) இற்றைப்படுத்தி முன்னேற்றி சட்டத்தின் ஆளுமையை உறுதிப்படுத்தி பிரஜைகளின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களது பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிகோலுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அத்தோடு, தேசிய பாதுகாப்பு என்பது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக பெறுமதிகளை கொன்றொழிப்பதற்காக பயன்படுத்தும், மனித உரிமைகளை அடக்கி ஒடுக்குகின்ற, பிரஜைகளின் குரலை முடக்குகின்ற பயங்கரவாத்த தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதோடு தற்போது வரைபாக இருக்கின்ற பயங்கரவாத த்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டத்தினை அரும்பிலேயே கைவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இதுவரையில் விசாரணைகள் இன்றி, சிறைச்சாலைகளிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர், இவ்வாறு கடந்த காலங்களிலும் வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறாக பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் உள்ள போதும் அதற்கு மேலாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வருவதானது மக்களையும், குறிப்பாக ஊடகவியலாளர்களையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் மென்மேலும் அடக்குமுறைக்குள் தள்ளும் என்பதில் எது வித ஐயமில்லை.

எனவே அரசாங்கம் புதிதாகக் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை உடனடியாக கைவிடுமாறு எமது ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுகிறது" என்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025