ஜனவரி முதல் விசேட தொலைபேசி இலக்கம்
Sri Lanka Police
Tiran Alles
Sri Lanka
By Beulah
ஜனவரி 1 முதல் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குறித்த அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (19) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள்
“பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், ஒடுக்குமுறைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் நிர்வகிக்கும் வகையில் இந்த அவசர தொலைபேசி இலக்கம் இயக்கப்படும்.
தனியுரிமை பாதுகாப்பு
இவ்விலக்கத்தின் ஊடாக நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்தவொரு மொழியிலும் பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்.
இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நம்பகமான மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்பட்ட வகையில் சேவை வழங்கப்படும்.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்