தமிழ் இளைஞர்களிடம் சிறிதரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை(video)

kilinochchi tna sritharan
By Sumithiran Apr 16, 2022 06:23 PM GMT
Report

தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்கமாக ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

4 இலட்சம் மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்த போது 70 ஆயிரம் மக்கள் தான் இருப்பதாக கூறி உணவு அனுப்பி உணவில்லாமலே சாகடிக்கப்பட்ட மக்கள் காயங்களுக்கு மருந்துகள் இல்லாமல் கொல்லப்பட்டபோது பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அதற்குள் அனைவரையும் செல்லுமாறு கூறி விட்டு அந்த இடத்திற்குள் கொத்துக் குண்டுகளையும் பறாஜ் குண்டுகளையும் வீசி எமது மக்களை இந்த அரசாங்கம் கொன்ற போது இந்த சிங்கள மாணவர்கள், சிங்கள சகோதரர்கள் எல்லோரும் அவற்றை வெறித்தனமாக பார்த்தார்கள். பயங்கரவாதமாக பார்த்தார்கள். தமிழர்களை அழிப்பதை ஏற்றுக் கொண்டார்கள். சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் பாற்சோறு கொடுத்துக் கொண்டாடினார்கள். எல்லோரின் வீடுகளிலும் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டன.

சிங்கள மக்கள் எல்லோரும் அவற்றை மகிழ்ச்சியோடு பார்த்தார்கள் 69 இலட்சம் சிங்கள மக்கள் வாக்களித்து கோட்டபாய ராஜபக்சவை அரச தலைவர் ஆக்கினார்கள். இவை எல்லாம் நடந்தவை.

இப்போது நாங்கள் போய் அவர்களோடு சேர்ந்துதான் எங்களுடைய இளைஞர்களும் சேர்ந்துதான் போராட வேண்டும் என்றால் போகும் இளைஞர்களிடம் நான் பகிரங்கமாக கேட்கிறேன், இத்தனை நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெருக்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு நாள் ஆயிரம் இளைஞர்கள் கிளிநொச்சியில் திரளுங்கள் அதற்கு எங்கள் இளைஞர்கள் தயாரில்லை.

கைகளால் ஒப்படைக்கப்பட்ட கணவன்மார், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் என யாருமே இல்லை. எங்கு என்றும் தெரியாது இவர்களை தேடியவாறு இருக்கும் தாய்மார்கள் உடன் ஆயிரம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடுங்கள் என உங்களைப் பகிரங்கமாக கேட்கிறேன்.

சிங்கள இளைஞர்களின் போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் இளைஞர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் பற்றி பேசினால் அந்த இளைஞர்களின் பாதங்களுக்கு பூப் போட்டு வணங்கவும் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் போராடியது எங்களுடைய உரிமைகளுக்காக இழந்துபோன இறைமைகளை மீட்டெடுப்பதற்காக எங்களுடைய மண்ணில் சுயாட்சி முறையிலான உரிமையை வென்றெடுக்க நாங்கள் போராடுகிறோம் இது முற்றுமுழுதான உரிமைக்கான போராட்டம் உயிர் வாழ்தலுக்கான போராட்டம் அடுத்த பரம்பரைக்கான நிம்மதிக்கான போராட்டம் தான் நாம் இந்த மண்ணில் நடாத்துகிறோம்.

நாங்கள் எரிபொருளுக்காக போராடவில்லை எரிவாயுவிற்காக போராடவில்லை நாங்கள் மின்சாரத்திற்காக போராடவில்லை உணவிற்காக நாங்கள் போராடவில்லை இவை இல்லாமல் நாங்கள் வாழ்ந்தவர்கள் நாங்கள்.

யாருடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவில்லை நீங்கள் போராடுவது ஒரு கொடுங்கோலனுக்கு எதிராக இனப்படுகொலையாளிக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச என்கிற இருவரும் இந்த மண்ணில் தமிழ்த் தேசிய இனத்தை படுகொலை செய்தவர்களுக்கெதிராக போராடுகிறீர்கள்.

நாம் உங்களுக்கு முதலே 2019 ஆம் ஆண்டிலேயே இவர்களுக்கு எதிராக போராடியிருக்கிறோம். கடந்த காலங்களில் சிங்கள மக்கள் போராடிய போது தமிழர்கள் ஆதரவு நல்கியிருக்கிறார்கள் அவர்கள் தங்களின் பிரச்சினை தீர்ந்ததும் தமிழர்களுக்கு எதிராக மாறியிருக்கிற பல சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெற்றிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

https://fb.watch/cqK7cprHBw/


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020