நுவரெலியாவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி - மூவர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By pavan
நானு ஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் வானில் பயணித்த 6 பேரும் முச்சக்கவரவண்டி சாரதியுமாக 7 பேர் உயிரிழந்த அதே இடத்தில் வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் பயணித்த மூன்று ஆண்கள் பலத்த காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி