இரவோடு இரவாக அகற்றப்பட்ட 'ரணில் கோ கம' ( படங்கள்)
Ranil Wickremesinghe
SL Protest
Negombo
Sri Lanka Anti-Govt Protest
Go Home Ranil
By Vanan
நீர்கொழும்பு ' ரணில் கோ கம' போராட்டகளம் இனம் தெரியாத நபர்களால் அதிகாலை வேளை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நீர்கொழும்பு - தெல்வத்தை சந்தியில் நேற்று மாலை ஆறு மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தி இருந்ததோடு அரசாங்கத்திற்கும் அதிபருக்கும் எதிராக குரல் எழுப்பினர்.
இனம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்ட 'ரணில் கோ கம'
ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு ரணில் கோ கம நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் இனம் தெரியாத நபர்களால் முற்றாக அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி