இரு குழுக்களுக்கிடையில் மோதல்! ஒருவர் பலி

murder arrest police sri lanka attack investigation batticalo
By Kalaimathy Feb 21, 2022 09:40 AM GMT
Report

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில்  இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

காங்கேயனோடையில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் மற்றவரை தாக்கியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த நபர் காத்தான்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

காங்கேயனோடை தடாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் காங்கேயனோடை பகுதியைச் சேர்ந்த 43 வயதான லெப்பை மொஹமட் இல்பான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காத்தான்குடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உயிரிழந்தவர் இதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

       

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025