இவ்வாண்டின் முதல்நாளில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு - பார்க்க படையெடுக்கும் மக்கள்
srilanka
batticalo
By Vasanth
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய ஆயித்தியமலை கிராமத்தில் வழமைக்கு மாறாக பசுவொன்று ஒரே சூலில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது என அதன் பராமரிப்பாளரான பெண் தெரிவித்தார்.
ஆயித்தியமலை மணிபுரம் கிராமத்;தைச் சேர்ந்த பாலச்சந்திரன் சுதர்ஷினி என்பவர் வளர்த்து வரும் பசுவே அவருக்கு இந்த அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது.
பசுவும் அதன் கன்றுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தான் அவற்றை மிக கவனமெடுத்துப் பராமரித்து வருவதாகவும் சுதர்ஷினி மேலும் தெரிவித்தார்.
பசுக்கள் வழமையாக ஒரு சூலில் ஒரு கன்றுதான் ஈனும் என்றும் இரண்டு கன்றுகள் ஒரே சூலில் கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வென்றும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாண்டின் முதலாம் திகதி நிகழ்ந்த இந்த அரிதான நிகழ்வை கிராம மக்களும் மாடு வளர்ப்பாளர்களும் அதிசயமாகப் பார்த்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி