இன்றும் இரண்டாயிரத்தை கடந்தது கொவிட் தொற்று!!
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 1,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 2,249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 135,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,145 பேர் இன்று (13) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 108,802 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 868 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்