இலங்கையில் மேலும் 2,564 பேருக்கு கொரோனா
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 2,564 பேருக்கு இன்று (5) கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462, 023 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384, 557 ஆக அதிகரித்துள்ளது.