ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்
இலங்கை தீர்மானம் இன்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்பு இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வெற்றியளிக்கும் வகையிவ் பல நாடுகளின் ஆதரவு இருந்தாலும் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதான நிறைவேற்றுமாறு இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரித்தானியா விடுத்த அழைப்புக்கு ஏற்ப வாக்கெடுப்பு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரேரணையை சமர்ப்பித்த பிரித்தானிய பிரதிநிதி தனது உரையின் ஆரம்பத்தில் அண்மையில் லண்டனில் காலமான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் திருமலை படுகொலையில் தனது புதல்வனை இழந்த அவருக்கு நீதி வழங்கப்படாத நிலையில் இந்த மரணம் இடம்பெற்ற துன்பியலை நினைவூட்டினார்.
இலங்கைக்கு கால அவகாசம்
அத்துடன், இந்த தீர்மானத்தை வாக்கெடுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்பின்னர் உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் உரையாற்றினர்.
முதலில் உரையாற்றி சீனப்பிரதிநிதி வழமைபோல சிறிலங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இந்த தீர்மானம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் ஒரு முயற்சியென குறிப்பிட்டார். சிறிலங்கா ஆதரவு நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டிருந்தன.
குறிப்பாக கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தால் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என அவை குறிப்பிட்டிருந்தன.
வெளியக விசாரணைக்கு எதிர்ப்பு
எனினும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட மேற்கு நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்திருந்தன. குறிப்பாக கரிபிய பிராந்திய நாடுகளும் தீர்மான ஆதரவு அணியில் இருந்தன.
இறுதியாக சிறிலங்கா பிரதிநிதி தனது உரையில் வெளியக தலையீடுகளுக்கும் வெளியக விசாரணை பொறிமுறைக்கும் எதிர்ப்புத்தெரிவித்தார்.
குறிப்பான பொறுப்புக்கூறல் திட்டத்தில் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேற்குலகின் நலன்களுக்கு உரியதெனவும் இது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முறுகல்களை நீடிக்கும் தன்மை கொண்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா பிரதிநிதியின் உரைக்குப்பின்னர் பின்னர் எந்த நாடுகளும் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோராததால் அது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படுவதாக பேரவையின் தலைவர் அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
