இலங்கை, வரலாற்றில் மிக மோசமான மின்வெட்டு - எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்
இலங்கை, வரலாற்றில் மிக மோசமான மின்வெட்டுக்கு தயாராக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார துறைக்கு பொறுப்பான நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம் கடலில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை பருவ மழை இல்லாத காலம் என்று கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்புகளை இறக்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளது.
நிலக்கரி கப்பல்
மின் உற்பத்தி ஆலைக்கு நாளொன்றுக்கு 7500 மெட்ரிக் டொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், ஆண்டுக்கு 60000 மெட்ரிக் டொன்கள் அதாவது 38 கப்பல்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 5 கப்பல்கள் தரையிறங்கியுள்ள நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் 6வது கப்பல் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஒரு நிலக்கரி கப்பலை இறக்குவதற்கு 5 நாட்கள் ஆகும் எனவும் தற்போது 25 கப்பல்களை மீதி நாட்களில் இறக்க முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்திற்கு 5 கப்பல்கள் இறக்க முடியும் என சிலர் கூறுகின்ற போதிலும் அவ்வாறு செய்வது சிரமம் எனவும் 20 கப்பல்களுக்கு விலை மனுக்கோரல் விடப்பட்ட போதிலும் 5 கப்பல்களே வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)