நிலவும் சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (10.04.2025) மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலி (Galle), களுத்துறை (Kalutara), மாத்தறை (Matara) மற்றும் இரத்தினபுரி (Ratnapura) மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கான முதல் கட்ட அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
குறித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு ஏற்படும் பகுதிகளை அண்டியவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கிடையில், அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
